Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விஜயகாந்தின் புதல்வர் சண்முகபாண்டியன் நடிக்கும் ‘மதுர வீரன்’

In சினிமா
Updated: 13:29 GMT, Apr 23, 2017 | Published: 10:50 GMT, Apr 23, 2017 |
0 Comments
1362
icon_com
This post was written by : Vithushagan
maduraveeran_3157127f

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் நடிக்கவுள்ள படத்துக்கு ‘மதுர வீரன்’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

சுரேந்திரன் இயக்கத்தில்  சண்முகபாண்டியன் நாயகனாக அறிமுகமான படம் ‘சகாப்தம்’. கார்த்திக் ராஜா இசையமைத்த இப்படத்தை கப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது.

அதனைத்தொடர்ந்து அருண் பொன்னம்பலம் இயக்கத்தில் ‘தமிழன் என்று சொல்’ படம் ஆரம்பிக்கப்பட்டது. விஜயகாந்த், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கவிருந்த படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில், அடுத்த படத்துக்கு பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார் சண்முகபாண்டியன். இறுதியாக ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா கூறிய கதை பிடித்துவிடவே, அதில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

‘மதுர வீரன்’ என தலைப்பிடப்பட்டுள்ள படத்தின் கதாநாயகியை தெரிவு செய்வதற்கான பணி நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg