Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஏழை மக்கள் என்பதால் எம்மை யாருமே கண்டுகொள்ளவில்லை: பன்னங்கண்டி மக்கள்

In இலங்கை
Published: 11:04 GMT, Apr 23, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Ravivarman

“ஒரு மாதத்தினைக் கடந்தும் எமது தொழில்களைவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். நாம் அனைவரும் அன்றாடம் கூலித்தொழில் செய்தே சாப்பிட்டு வருகின்றோம். ஏழை மக்கள் என்பதால் எம்மை யாருமே கண்டு கொள்ளவில்லை” என பன்னங்கண்டி மக்கள் தமது ஆதங்கத்தினைத் தெரிவித்துள்ளனர்.

நீண்ட காலமாக இக்காணிகளிலேயே வசித்த இவர்கள் யுத்தத்தின் பின்னர் மீண்டும் அப்பிரதேசங்களில் குடியேறியுள்ள நிலையில் இந்தக் காணிகளின் உறுதிப்பத்திரங்களை காணியின் உரிமையாளர் வழங்கவேண்டும் என கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 33ஆவது நாளாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒருவர் இது குறித்துத் தெரிவிக்கையில்,

“யுத்தத்தின் பின்னர் மீள்குடியேறுவதற்காக இந்தக்காணிகளை நம்பியே நாங்கள் இங்கு வந்தோம். மிக நீண்ட காலமாக நாங்கள் வசித்துவந்த பூமி இது. எமது சந்ததிகள் மீண்டும் அகதிகளாக இருக்கக்கூடாது. சொந்த நிலத்தில் வாழ்வதற்கே எங்களுக்கு ஆசை. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காணி உரிமையாளருடன் கதைத்து எமக்கு நல்ல தீர்வினைத் தரவேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg