Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நள்ளிரவு முதல் எரிபொருள் விநியோகம் பாதிக்கும்: பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கம்

In இலங்கை
Updated: 13:03 GMT, Apr 23, 2017 | Published: 11:39 GMT, Apr 23, 2017 |
0 Comments
3165
This post was written by : Ravivarman
oil-pump

பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க ஊழியர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களின் ஒன்றிய ஏற்பாட்டாளர் டீ.ஜே.ராஜகருணா அறிவித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“திருகோணமலை துறைமுகத்திலுள்ள எண்ணெய்த் தாங்கிகளை இந்திய நிறுவனத்துக்கு (ஐ.ஓ.ஸி.) வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றோம்.

அரசாங்கத்தினது மேற்படி முடிவுகள் எமது தொழிற்சங்கங்களை பாதிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நாளை நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை நிலவும் அபாயம் காணப்படலாம்” என டீ.ஜே.ராஜகருணா மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg