Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விவசாயிகள் போராட்டம்: நடிகர் சங்கம் ஆதரவு

In சினிமா
Updated: 04:26 GMT, Apr 24, 2017 | Published: 15:16 GMT, Apr 23, 2017 |
0 Comments
1063
icon_com
This post was written by : Vithushagan
nadigar_3094315f

விவசாயிகளுக்கு நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து எதிர்வரும் 25ஆம் திகதி  நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

டில்லியில் ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் இன்று 41ஆவது நாளாக தொடர்கின்றது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் இந்த போராட்டம் நடைபெறு வருகிறது.

வங்கிக்கடன் இரத்து, வறட்சிக்கான கூடுதல் நிவாரணம் மற்றும் காவிரி மேலாண்மை அமைப்பது உட்பட பலதும் அவர்கள் கோரிக்கைகளாக உள்ளன. இதில், அன்றாடம் அரசு மற்றும் பொதுமக்களது கவனத்தை கவரும் வகையில் பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க அல்லாத இதர கட்சிகள் ஒன்றிணைந்து முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள். இப்போராட்டத்துக்கு நடிகர் சங்கம் தங்களுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளதாக அறிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg