Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மொசூலில் தற்கொலை குண்டுதாக்குதல்: மூன்று பொலிஸார் உட்பட ஐவர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 12:59 GMT, Apr 23, 2017 | Published: 11:47 GMT, Apr 23, 2017 |
0 Comments
1179
icon_com
This post was written by : Anojkiyan
Mosul_offensive-11-e1478036864713

மொசூலின் வடக்கே உள்ள ஈராக் பொலிஸ் துறையின் ஹெலிகொப்டர் தளத்தினுள் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில், பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

மொசூலின் வடக்கே, அல் அரீஜ் என்ற இடத்தில் உள்ள ஹெலிகொப்டர் தளத்தில் குறித்த தாக்குதல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று இப்பகுதிக்கு வந்த சுமார் பத்து தீவிரவாதிகள் ஹெலிகொப்டர் தளத்திற்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். இந்த முயற்சியை பொலிஸார் தடுக்க முயன்ற போது தீவிரவாதி ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை இயக்கி, வெடிக்கச் செய்துள்ளார்.

இதில் மூன்று பொலிஸார் உடல் சிதறி உயிரிழந்தனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். எஞ்சிய தீவிரவாதிகள் வாகனத்தில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg