Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடகொரியாவில் அமெரிக்க பிரஜை கைது: தென் கொரியா தகவல்

In
Published: 12:08 GMT, Apr 23, 2017 |
0 Comments
1370
icon_com
This post was written by : Anojkiyan

வடகொரியாவை விட்டு வெளியேறிச் செல்ல முயன்ற அமெரிக்க பிரஜை ஒருவர், பியாங்யாங் சர்வதேச விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர் அவரது குடும்பப் பெயரான கிம் என்ற பெயரால் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

50 வயது மதிக்கதக்க இவர், சீனாவில் உள்ள யான்பியான் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் என்றும், சில நிவாரண திட்டங்கள் தொடர்பாக கடந்த ஒரு மாதமாக அவர் வடகொரியாவில் தங்கியிருந்ததாகவும் தென் கொரிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இருநாடுகளுக்குமிடையில் போர் சூழல் நிலவுகின்ற நிலையில், இந்த கைது நடவடிக்கையானது அமெரிக்காவை மேலும் ஆத்திரமூட்டியுள்ளது.

இருநாடுகளுக்கிடையிலான மோதலின் பின்னர், வடகொரியாவில் கைதுசெய்யப்பட்ட முன்றாவது அமெரிக்கர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg