Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் கோரிக்கைகளை கருணையுடன் பரிசீலியுங்கள்: தமிழக முதல்வர்

In இந்தியா
Updated: 12:54 GMT, Apr 23, 2017 | Published: 12:00 GMT, Apr 23, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Shailu
Edappadi Palanisamy

விவசாயிகளின் கோரிக்கைகளை கருணையுடன் பரிசீலியுங்கள் என்று மத்திய அரசிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆய ஆலோசனை கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. அதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்ற நிலையில், இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்தோடு, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என கூறிய அவர், இலங்கை வசமுள்ள 133 மீனவ படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகளில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பயிர்க் காப்பீட்டு தொகையை இம்மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதல்வர், பழங்குடியின மாணவர்களுக்கான ரூ.1,882 கோடி உதவித்தொகையை பெற்றுத்தர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg