Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீண்டும் தெலுங்கு திரையுலகில் ஆர்வம் காட்டும் நடிகை கௌதமி

In சினிமா
Updated: 12:31 GMT, Apr 23, 2017 | Published: 12:31 GMT, Apr 23, 2017 |
0 Comments
1196
This post was written by : Shailu
Gautami

தெலுங்கை தாய் மொழியாக கொண்ட நடிகை கௌதமி தமிழ் திரையுலகில் பல படங்களை நடித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளில் சில தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்திருந்த இவர், பின்னர் திரையுலகில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான பாபநாசம் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்தார். அந்தவகையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கு திரையுலகில் நடிக்க கௌதமி ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது.

தற்போது மூன்று மலையாள படங்களில் பிசியாக நடித்து வரும் கௌதமி, அதனைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் நடிக்க உள்ளார். இதற்காக சில தெலுங்கு இயக்குநர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg