Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் ஒப்பந்தம் மீண்டும் அமைச்சரவையில்

In இலங்கை
Published: 14:26 GMT, Apr 23, 2017 |
0 Comments
1186
This post was written by : Vithushagan
Hambantoa_port

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் மேர்ச்சன்ட்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பான திருத்தப்பட்ட உடன்பாட்டு வரைபு, எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

துறைமுகங்கள் அமைச்சு மற்றும் ஏனைய தரப்புகளின் யோசனைகளைக் கருத்தில்கொண்டு உடன்பாட்டு வரைபில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு விடும் காலத்தை 99 ஆண்டுகளில் இருந்து 50 தொடக்கம் 60 வரையான ஆண்டு காலத்துக்கு குறைக்கும் வகையிலும், குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னர் திரும்பக் கையளிக்கும் வகையிலும், குத்தகை உரிமையை, 80 : 20 என்ற விகிதத்தில் இருந்து, 60 : 40 அல்லது 51 : 49 எனக் குறைக்கும் வகையிலும், துறைமுகத்தின் பாதுகாப்புக்கு இலங்கையே பொறுப்பு என்ற வகையிலும் உடன்பாட்டு வரைபில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட உடன்பாட்டு வரைவை சிறப்பு திட்டங்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம அமைச்சரவையில் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg