Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வெனிசுவேலா ஜனாதிபதி அழைப்பு

In உலகம்
Published: 04:14 GMT, Apr 24, 2017 |
0 Comments
1133
icon_com
This post was written by : Elakkiya
Venezuelan-President--415x260

வெனிசுவேலாவில் தற்போது அரசியல் ஸ்திரமற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மடுரோ இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி நிக்கோலா மடுரோவுக்கு எதிராக கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக நாடுமுழுவதிலும் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்று (திங்கட்கிழமை) மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியே மேற்படி ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி, வெனிசுவேலாவில் விரைவில் உள்ளூர் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். எனினும் ஜனாதிபதி தேர்தல் குறித்து எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

கடந்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு மடுரோ நேரத்தை வீணடித்ததாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg