Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடகொரியா விடயத்தில் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை கடைப்பிடிக்க ஜப்பான் தீர்மானம்

In
Published: 05:05 GMT, Apr 24, 2017 |
0 Comments
1430
icon_com
This post was written by : Elakkiya

சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தல்களை விடுக்கும் வடகொரியா தொடர்பான விடயங்களில், அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை கடைப்பிடிப்பதற்கு உடன்பட்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்புடனான தொலைபேசி உரையாடல்கள் குறித்து இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி குறிப்பிட்டுள்ளார். இதன்போது, வடகொரியாவை கையாள்வதில் அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கும் அபே பாராட்டு தெரிவித்துள்ளார்.

வடகொரியாவை மூழ்கடிக்க தயார் என்பதை அறிவுறுத்தும் வகையில், யு.எஸ்.எஸ் கார்ல்வின்சன் விமானம் தாங்கிக் கப்பலை கொரிய தீபகற்பத்தை நோக்கி அமெரிக்கா திருப்பியுள்ளது. இந்நிலையில் வடகொரியா அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முன்னெடுக்கலாம் என்ற அச்சநிலை தோன்றியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg