Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமாதான பேச்சுவார்த்தைகளே சிரிய பிரச்சினைக்கு தீர்வாக அமையும்: சீன தூதுவர்

In உலகம்
Updated: 05:37 GMT, Apr 24, 2017 | Published: 05:37 GMT, Apr 24, 2017 |
0 Comments
1262
This post was written by : Elakkiya

சமாதான பேச்சுவார்த்தைகளுடனான அரசியல் தீர்வை அடைவதன் மூலமே சிரிய நெருக்கடிகளுக்கு தீர்வுகாண முடியும் என சிரியாவுக்கான சீன சிறப்பு தூதுவர் ஸி ஸியோயான் (Xie Xiaoyan) தெரிவித்துள்ளார்.

சிரிய நெருக்கடிகளுக்கான தீர்வுகளை ஆராயும் நோக்கில் எகிப்திய வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து கலந்துரையாடிய போதே ஸியோயான் மேற்படி தெரிவித்துள்ளார்.

அங்கு  தொடர்ந்தும் கருத்துரைத்த அவர் , “குறுகிய காலத்தில் சிரிய பிரச்சினையை தீர்ப்பதற்கு நாம் எதிர்பார்க்க முடியாது. சிரிய பிரச்சினைகள் சிக்கல்கள் வாய்ந்ததாக உள்ளன. சிரிய பிரச்சினைகளில் சிக்கல்கள், பின்னடைவுகள் எதுவும் இல்லை என்று எதிர்பார்க்க முடியாது. அதேவேளை சம்பந்தப்பட்ட அனைத்து கட்சிகளும் பதற்றங்களை அதிகரிப்பதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமன்றி யுத்தநிறுத்த உடன்படிக்கையை முழுமையான நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எகிப்து ஒரு முக்கிய பிராந்திய நாடு என்ற வகையிலும் சிரிய விவகாரங்களில் நேர்மறையான மற்றும் முக்கிய பங்கை கொண்டுள்ளது என்ற வகையிலும் எகிப்துடன் நெருக்கமான உறவுகளை பேணுவதற்கு சீனா விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg