Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோற்றத்தை மாற்றத் தயாரில்லை: ஜடேஜாவின் கோரிக்கையை மறுத்தார் கோஹ்லி

In விளையாட்டு
Updated: 05:49 GMT, Apr 24, 2017 | Published: 05:32 GMT, Apr 24, 2017 |
0 Comments
3402
This post was written by : Risha

வீரர்களின் ஓய்வறையில் நமது தோற்றத்தை மாற்றுவோம், தாடிக்கு ஓய்வு கொடுப்போம் என்ற ரவீந்திர ஜடேஜாவின் கோரிக்கையை இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி மறுத்துள்ளார்.

தாடி வளர்ப்பது இந்திய வீரர்களிடையே புதிய கலாசாரமாக தோற்றம் பெற்றுள்ளது. இந்நிலையில், ஜடேஜாவின் இவ்வாறான கருத்தை மறுத்த கோஹ்லி இப்போதைக்கு தாடிக்கு விடைகொடுக்க தயாரில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அணித்தலைவர் விராட் கோஹ்லி தாடியுடன் வலம் வருகின்ற நிலையில், தலைவரின் பாணியில் பெரும்பாலான சக வீரர்களும் தாடி வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் ‘களத்தில் ஆட்டத்தை மாற்றுவோம். வீரர்களின் ஓய்வறையில் நமது தோற்றத்தை மாற்றுவோம். தாடிக்கு ஓய்வு கொடுப்போம்’ என்று ஜடேஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg