Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்சியின் நலன் கருதி அனைத்து பொறுப்புகளையும் இழக்கத் தயார்: ஜெயக்குமார்

In இந்தியா
Updated: 05:53 GMT, Apr 24, 2017 | Published: 05:30 GMT, Apr 24, 2017 |
0 Comments
1160
This post was written by : Shailu

கட்சியின் நலன் கருதி தனது அனைத்து பொறுப்புகளையும் இழக்கத் தயார் என நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சேத்துப்பட்டு ஏரியை நிதியமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “டி.டி.வி.தினகரனை நீக்கும் முடிவில் யாருடைய நிர்ப்பந்தமும் இல்லை. அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோரின் கருத்துக்களின் அடிப்படையில் குறித்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டது.

கட்சியில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள். எங்கள் தரப்பில் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. ஓ.பி.எஸ். தரப்பினர் பேச்சுவார்த்தை மேற்கொள்ள வரும் பட்சத்தில் நிச்சயம் பேச்சுவார்த்தை நடைபெறும்.

கட்சியின் நலன் கருதியும், இரட்டை இலையை மீட்கவும், ஆட்சியை காப்பாற்ற என்னிடம் உள்ள நிதித்துறை, திட்ட செயலாக்கம் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் இழக்கத் தயாராக இருக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க கட்சியானது ஓ.பி.எஸ் அணி மற்றும் சசிகலா தரப்பினர் என இரு அணிகளாக பிரிந்தது.

இதனிடையே, இரத்து செய்யப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலின் போது, அ.தி.மு.க கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவை முடக்கப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கிடையிலும் போட்டிகள் நிலவின.

எனினும், சசிகலா குடும்பத்தினரை கட்சியின் அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் ஒதுக்க தீர்மானிக்கப்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை நடத்தி இரு அணிகளையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg