Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐ.பி.எல்.: பெங்களூர் அணியை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

In விளையாட்டு
Updated: 06:18 GMT, Apr 24, 2017 | Published: 05:58 GMT, Apr 24, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Risha
kol

பத்தாவது ஐ.பி.எல். தொடரின் 27ஆவது போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்ட கௌதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 82 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.

கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து 132 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர் அணி 9.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 49 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அதன்படி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 82 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி, ஐந்து போட்டிகளில் வெற்றியீட்டி 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது.

இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி, இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றியீட்டி 4 புள்ளிகளுடன் பட்டியலில் இறுதி இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg