Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐ.பி.எல். தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது பஞ்சாப் அணி

In விளையாட்டு
Updated: 06:50 GMT, Apr 24, 2017 | Published: 06:23 GMT, Apr 24, 2017 |
0 Comments
1222
icon_com
This post was written by : Risha
Vivo IPL 2017 M26 - GL v KXIP

தொடர் தோல்வியை தவிர்க்கும் வகையில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் ஐ.பி.எல். தொடரின் 26ஆவது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை எதிர்கொண்ட கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி, 26 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியுள்ளது.

ராஜ்கோட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெறும் 162 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அதன்படி பஞ்சாப் அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தனது மூன்றாவது வெற்றியை பதிவுசெய்து, ஆறு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதேவேளை, குஜராத் அணி இரண்டு வெற்றிகளுடன் ஏழாவது இடத்தில் காணப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg