Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்பள்ளிகளில் கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு ஊழியர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Published: 06:31 GMT, Apr 24, 2017 |
0 Comments
1161
This post was written by : Ravivarman

முன்பள்ளிகளில் கடமையாற்றும் சிவில் பாதுகாப்பு ஊழியர்களை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட மேற்படி ஆர்ப்பாட்டம், அங்கிருந்து மாவட்ட செயலகத்தை சென்றடைந்ததுடன், அரச அதிபருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கல்விக் கொள்கைகளுக்கு மாறாக முன்பள்ளிகளை சிவில் பாதுகாப்புத் திணைக்களம் நிர்வகித்து வருகின்றது. இந்நிலையில் குறித்த முன்பள்ளிக் கட்டமைப்பை வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட வேண்டுமென பல்வேறு தரப்புக்களாலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதுடன், வடக்கு மாகாண சபையிலும் இது தொடர்பான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG20170424095000 IMG20170424094838 IMG20170424094751

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg