Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘Panasonic’ உடன் இணைந்து ‘Hutch’ வழங்கும் புதிய சலுகை

In வணிகம்
Updated: 08:10 GMT, Apr 24, 2017 | Published: 07:27 GMT, Apr 24, 2017 |
0 Comments
1163
This post was written by : Surenth

‘Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd.’ உடன் இணைந்து ‘Metropolitan Telecom Service (Pvt) Ltd.’ நிறுவனம் ‘Panasonic’ ‘Smartphone’ கொள்வனவின் போது Hutch சிம் அட்டையை இலவசமாக வழங்கவுள்ளது.

‘Metropolitan’ குடும்பத்தின் ஒரு துணை நிறுவனமாக, கடந்த 25 ஆண்டுகளாக சேவையாற்றி வருகின்ற ‘Metropolitan Telecom Service’ நிறுவனத்தினர் பல்வேறுபட்ட உயர்தர Mobile சாதனங்களின் விநியோகஸ்தராக செயற்பட்டு வருகின்றனர்.

இந்த பங்குடமையின் மூலமாக ‘Panasonic’ மற்றும் ‘Hutch’ ஆகியன தமது வியாபார வளர்ச்சிக்கான அடித்தளத்தை விஸ்தரிப்பதற்கான முயற்சியை இந் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

இதன்படி, ‘Metropolitan’இன் அனுசரணையுடனான விற்பனையாளர்களிடம் எந்த ஒரு ‘Panasonic’ Smartphoneயை கொள்வனவு செய்யும் வேளையிலும், Hutch சிம் ஒன்று இலவசமாக வழங்கப்படுகின்றது.

இந்த சிம் மூலம் பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பாக ‘Voice’ மற்றும் தரவுகள் போன்ற இதர நன்மைகள் அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Hutch வாடிக்கையாளர்களுக்கு அதிசிறந்த மொபைல் இணைய அனுபவத்தை வழங்குவதே தமது பிரதான நோக்கம் எனவும் இதன்படியே HutchPanasonic இணைந்து இந்த புதிய சலுகையை வடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக Hutch Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg