Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பியன்ஸ் கிண்ண தொடர்: நியூசிலாந்து அணியின் விபரம் அறிவிப்பு

In விளையாட்டு
Updated: 08:15 GMT, Apr 24, 2017 | Published: 07:41 GMT, Apr 24, 2017 |
0 Comments
1843
This post was written by : Risha

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான நியூசிலாந்து அணி, நியூசிலாந்து கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக கடந்த போட்டிகளில் இடம்பெறாதிருந்த கோரி அண்டர்சன், மிட்செல் மெக்லெனகன் மற்றும் ஆதம் மில்னே ஆகியோர் ஐ.பி.எல். தொடரில் தமது உடற்தகுதியை நிரூபித்துள்ள நிலையில், அவர்கள் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஐந்து சிறப்பு துடுப்பாட்ட வீரர்கள், நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், மூன்று சகலதுறை ஆட்டக்காரர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் நியூசிலாந்து அணி களமிறங்கவுள்ளது.

சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான நியூசிலாந்து அணி வீரர்களின் விபரம்:

கேன் வில்லியம்சன் (தலைவர்), கோரி அண்டர்சன், ட்ரென்ட் போல்ட், நீல் ப்ரூம், கொலின் டி கிராண்ட்ஹோம், மார்ட்டின் கப்தில், டாம் லாதம், மிட்செல் மெக்லெனகன், ஆதம் மில்னே, ஜிம்மி நீஷம், ஜீத்தன் பட்டேல், லூக் ரோஞ்சி, மிட்செல் சான்ட்னெர், டிம் சவுத்தி, ரொஸ் டெய்லர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg