Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அலுவலகத்தில் கணனியை பயன்படுத்தும் போது அவதானம்!

In அறிவியல்
Updated: 09:07 GMT, Apr 24, 2017 | Published: 08:58 GMT, Apr 24, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Surenth
Office Use Computer

நீங்கள் உங்கள் அலுவலக கணனியில் வேலை செய்யும் போது, உங்கள் மேலாளருக்கு நீங்கள் செய்யக்கூடிய எல்லாவற்றையும் கண்காணிக்க முடியும். அத்துடன் நீங்கள் கணனியில் செய்யும் எந்தவொரு தனிப்பட்ட தரவு அல்லது நடத்தையையும் சேகரிக்க முடியும்.

இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு தேடல், கிளிக், அனுப்பிய மின்னஞ்ல், ஷொப்பிங், சமூக வலைத்தளம் என அனைத்தையும் கண்காணிக்க முடியும்.

இணைய உலாவியை பயன்படுத்தி தேடுதல் செய்த பின்னர் ‘History Clear’ செய்வதின் மூலம் நீங்கள் செய்த அனைத்தையும், இணையத்தில் உங்கள் நேரத்தை செலவழித்த எல்லா ஆதாரத்தையும் அகற்றி விட்டதாக நீங்கள் நினைத்தால் அது தவறு.

பெரும்பாலான IT துறைகள் நீங்கள் என்ன தான் உங்களின் ‘Browsing History Clear’ செய்தாலும் உங்களின் கணனி பயன்பாட்டை கண்காணிக்கிறது. குறிப்பாக மிகவும் கேள்விக்குரிய ஒன்றாக கருதப்படும் உங்களின் தேடல்களை கண்காணிக்கிறது.

இதனை மனதில் கொண்டு, உங்கள் வேலை தொடர்பான சாதனங்களில் நீங்கள் கண்டிப்பாக விலகியே இருக்க வேண்டும்.

01. ஆபாசம் அல்லது பிற பொருத்தமற்ற இணையதளங்களை சில மூளை இல்லாதவர்கள் மட்டுமே அலுவலக கணனியில் பார்ப்பார்கள். இருப்பினும் சிலரால் இதை பார்க்காமல் இருக்க முடிவதில்லை. அவர்களை அவர்களே நினைத்தாலும் வேலையில் இருந்து காப்பாற்றுவது சிரமம்.

02. ஏதோ  ஒரு காரணத்திற்காக வரம்புக்குட்பட்ட விஷயங்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரிந்தால் அவற்றை பார்ப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள். அவற்றை எக்காரணம் கொண்டும் சொந்தமாக அணுக வேண்டாம். இதுபோன்ற விடயங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில் அவைகள் உங்கள் நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

03. நீங்கள் இரண்டாவதாக ஒரு வேலை அல்லது உங்கள் சொந்த வியாபாரத்தில் இயங்குபவராக இருந்தால், அது சார்ந்த எந்தவொரு விடயத்தையும் உங்களின் அலுவலக கணனியில் செய்ய வேண்டாம். சொந்த வியாபாரத்தை இயக்கும் போது பல ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை மறக்க வேண்டாம். உங்கள் இணைய நடவடிக்கைகள் உங்கள் மேலாளருக்கு மிகப்பெரிய சிவப்பு கொடிகளை வழங்கும் என்பதையும் மறக்க வேண்டாம்.

04. உங்களின் வேலை உங்களுக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அது இரண்டாம் பட்சம். முதலில் ஒரு புதிய வேலைக்காக உங்கள் பணியிட கணனியை எக்காரணம் கொண்டும் பயன்படுத்த வேண்டாம். நீங்கள் உங்கள் தற்போதைய வேலை பாத்திரத்தில் மகிழ்ச்சியற்றவராக இருந்தாலும் கூட, உங்களுக்கு நீங்களே ஒரு தீவிர ஆபத்தை உண்டாக்கிக் கொள்ளாதீர்கள்.

05. டேட்டிங் மற்றும் உறவு தொடர்பான வலைத்தளங்கள், எங்கே போகலாம் என்ற கூகுள் மேப்ஸ் தேடலே சிக்கல் என்ற பட்சத்தில் ஒருவேளை நீங்கள் டேட்டிங் அல்லது சாட்டிங் போன்ற பணிகளை உங்களின் அலுவலக கணனியில் செய்தால் என்னவாகும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

06. உங்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளை திட்டமிடும் வேலையை, அலுவலக கணனியில் செய்வது என்பதை யாருமே சகித்துக் கொள்ள மாட்டார்கள். அவ்வளவு ஏன், நீங்களே ஒரு உரிமையாளராக  இருந்தால் கூட இதை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். எனவே திருமணங்கள், கொண்டாட்டங்கள் அல்லது விடுமுறைகள் சம்பந்தப்பட்ட எதையுமே ஆராய்ச்சி செய்ய எந்தவொரு தளங்களையும் பயன்படுத்த வேண்டாம்.

07. ஒருவர் எந்த அளவிலான நேரம் மற்றும் அதிர்வெண் கொண்ட தேடல்களை நிகழ்த்துகிறார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். சிலர் இரவு நடந்த கிரிக்கெட் போட்டியின் ஸ்கோரை பார்த்துவிட்டு வேலையை தொடங்குவர். சிலரோ முழு போட்டியின் மறு ஒளிபரப்பை பார்ப்பர். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. எனவே அலுவலக கணனியில் எந்தவொரு கூகுள் தேடல் நிகழ்த்துவதும் ஒரு மோசமான யோதனை தான் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg