Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து இலங்கை அவதானம் செலுத்த வேண்டும்: ஜேர்மனி

In இலங்கை
Updated: 15:08 GMT, Apr 24, 2017 | Published: 09:26 GMT, Apr 24, 2017 |
0 Comments
1065
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
Flag-Pins-Germany-Sri-Lanka

இலங்கையில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் பலவுண்டு எனத் தெரிவித்துள்ள ஜேர்மனி, ஜெனீவாவில் கடந்த 2015ஆம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய தருணம் இதுவென சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு ஆங்கில நாளிதழொன்றுக்கு இலங்கைக்கான ஜேர்மனி தூதுவர் ஜோன் ரோட் வழங்கியுள்ள செவ்வியில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியமை மற்றும் அரசமைப்புப் பேரவையை நிறுவியமை என்பன சாதகமான நகர்வுகள் எனச் சுட்டிக்காட்டியுள்ள ஜேர்மனி தூதுவர், அரசியல் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காணிகளை மீளளித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மாற்றியமைத்தல், ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை என்பன இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக இருக்கின்றன என சுட்டிக்காட்டியுள்ளதோடு, இவை குறித்து துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமென மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg