Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போலிக் கடவுச்சீட்டு வழக்கு: சோட்டா ராஜன் குற்றவாளியாக அறிவிப்பு

In இந்தியா
Updated: 10:48 GMT, Apr 24, 2017 | Published: 10:31 GMT, Apr 24, 2017 |
0 Comments
1169
This post was written by : Shailu

போலிக் கடவுச்சீட்டு தயாரிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில்,  நிழலுலக தாதா என அழைக்கப்படும் சோட்டா ராஜன் குற்றவாளியாக  அறிவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சோட்டா ராஜன் உள்ளிட்ட 3 பேருக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவர்கள் மூவரும் மும்பை தொடர் குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் நண்பர்கள் என கூறப்படுகின்றது.

சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த சோட்டா ராஜன், போலிக் கடவுச்சீட்டு மூலம் வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நிலையில், அவர் கடந்த 2015ஆம் ஆண்டு பாலி தீவில் வைத்து இந்தோனேஷிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg