Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மென்பொருட்களை ஹெக் செய்து வியக்க வைத்த சிறுவன்

In அறிவியல்
Updated: 11:02 GMT, Apr 24, 2017 | Published: 10:37 GMT, Apr 24, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Surenth
hecker

அமெரிக்காவைச் சேர்ந்த அடம் மேட் என்ற 15 வயது நிரம்பிய சிறுவன் ஒருவன்  மைக்ரோசொப்ட், சொனி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சேவர்களில் நுழைந்து எளிதில் தகவல்களை எடுத்து விடுகின்றான்.

அவர் ஹெக் செய்ய உருவாக்கி இருக்கும் மென்பொருளை, ஏராளமான நிறுவனங்களுக்கும், சைபர் குற்றவாளிகளுக்கும் விற்றுள்ளார். அதற்காக அவர் பெற்றுக் கொண்ட தொகை வெறும் 30 இலட்சம் ரூபாய்கள் மட்டுமே. அவருடைய மென்பொருள் மூலம் 1.7 மில்லியன் சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளன.

அதனால் பிரபல நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு பணம் முக்கியமில்லை என்றும், பெயரும் புகழுமே முக்கியம் என்றும் குறித்த சிறுவன் குறிப்பிட்டுள்ளான். மேலும், தான் பயின்ற கல்லூரியின் சேவரை ஹெக் செய்து, கணக்கிட முடியாத அளவிற்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அடம் மேட்டின் மென்பொருளில் 112,000 பேர் பதிவு செய்து, 666,000 ஐ.பி முகவரிகளில் இருந்து ஹெக் செய்துள்ளனர். இதுதொடர்பாக அடம் மேட் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், தனது குற்றத்திற்காக அபாராதம் செலுத்தியதோடு, மன்னிப்பும் கோரியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg