Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தெலுங்கில் வெளியாகும் சிம்புவின் இது நம்ம ஆளு

In சினிமா
Published: 14:03 GMT, Apr 24, 2017 |
0 Comments
1125
This post was written by : Vithushagan
201704241031466048_Simbu-Idhu-Namma-Aalu-movie-dubbed-Telugu_SECVPF

சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘இது நம்ம ஆளு’ படம் தெலுங்கிலும் வெளியிட  உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிம்பு நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்தை ‘பசங்க’ பாண்டியராஜ் இயக்கியிருந்தார். நயன்தாரா, அண்ட்ரியா, சந்தானம், சூரி ஆகியோரது நடிப்பில் உருவான இப்படம் பல்வேறு பிரச்சினைகளை தாண்டி வெளிவந்தது. இருப்பினும், இப்படம் இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த படத்தை தெலுங்கிலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இப்படத்தை எதிர்வரும் மே மாதத்தில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

தெலுங்கில் ‘சரசுடு’ என்ற பெயரில் இப்படம் வெளியாகிறது. தமிழில் கிடைத்த வரவேற்பு தெலுங்கிலும் கிடைக்கும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இப்படத்தின் தமிழ் பதிப்பை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் மற்றும் ‘பசங்க’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தன. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிட்டது. சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg