Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிரித்தானியாவில் ஷரியா நீதிமன்றங்கள் இல்லை: சர்வதேச வழக்கறிஞர்

In
Updated: 12:05 GMT, Apr 24, 2017 | Published: 11:49 GMT, Apr 24, 2017 |
0 Comments
1194
icon_com
This post was written by : Elakkiya
Islamic

ஐக்கிய இராட்சியத்தில் அல்லது பரந்த அட்லாண்டிக் உலகில் ஷரியா நீதிமன்றங்கள் இல்லை என சர்வதேச வழக்கறிஞரும் அரசியல் ஆய்வாளருமான பர்ரி குரொஸ்மான் தெரிவித்துள்ளார்.

UKIPஇன் பவுல் நுட்டாலின், இஸ்லாமியத்திற்கு எதிரான கருத்துக்களை மேற்கோள்காட்டி இன்று (திங்கட்கிழமை) ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது, தற்போதைய சர்ச்சை பிரித்தானிய ஊடகம் மற்றும் சுயநலவாத அரசியல்வாதிகளால் தோற்றுவிக்கப்பட்டதாகவும் அவர்கள் இஸ்லாமியத்திற்கு எதிரான கலாசாரத்தை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஷரியா கொள்ளைகளுக்கு இணங்க குடும்பங்களின்  நிதி மற்றும் வர்த்தக பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே பிரித்தானியாவில்  ஷரியா கவுன்சில் உள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்காவை பிரித்தானியாவில் தடை செய்வதற்கும் ஷரியா நீதிமன்றங்களை இல்லாதொழிப்பதற்கும் தமது கட்சி முனைப்பு காட்டும் என்று UKIP கட்சியின் தலைவர் பவுல் நுட்டால் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg