Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கிளிநொச்சியில் நடைபெற்ற காணிப்பிணக்குகளை தீர்ப்பதற்கான நடமாடும் சேவை

In இலங்கை
Updated: 11:17 GMT, Apr 24, 2017 | Published: 11:16 GMT, Apr 24, 2017 |
0 Comments
1065
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
community

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்திற்குற்பட்ட மக்களின் காணிப்பிணக்குகளைத் தீர்ப்பதற்கான நடமாடும் சேவையொன்று, கரைச்சி பிரதேச செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

‘நிலமெகவர 2017′ எனப்படும் ஜனாதிபதியின் மக்கள் சேவையின் தேசிய திட்டத்திற்கு அமைவாக, காணி அமைச்சும் காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நடமாடும் சேவையில் கரைச்சி பிரதேசத்திற்குட்பட்ட 60 வரையான காணிப்பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டன.

தொடர்ந்து நாளைய தினம் கண்டாவளை, பளை, பூநகரி ஆகிய பிரதேச செயலகங்களில் இந் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளதோடு, குறித்த பிரதேச மக்களின் காணிப்பிணக்குகள் தொடர்பாக அங்கு ஆராயப்படவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg