Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆஃப்கானில் இராணுவ முகாமுக்கு அருகில் கார்க்குண்டுத் தாக்குதல்

In உலகம்
Updated: 12:31 GMT, Apr 24, 2017 | Published: 12:12 GMT, Apr 24, 2017 |
0 Comments
1205
This post was written by : Elakkiya

ஆஃப்கானிஸ்தானின் காஸ்ட் மாகாணத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு அருகில் இன்று (திங்கட்கிழமை) கார்க்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

எனினும் சேத விபரங்கள் குறித்த உடனடித் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமையும் தலிபான் தீவிரவாதிகளால் இதுபோன்ற தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதில் 140 ஆஃப்கானிஸ்தான் இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதன் விளைவாக நாட்டின் பாதுகாப்பு அமைச்சரும் இராணுவ தலைமை அதிகாரியும் இன்று தமது பதவிகளை இராஜினாமா செய்துகொண்டனர்.

அதேவேளை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மார்ட்டிஸ் இன்றைய தினம் ஆஃப்கானிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவ்வாறான சூழ்நிலைகளில் மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg