Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இஸ்ரேலிய பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற பலஸ்தீன பெண் மீது துப்பாக்கிச் சூடு

In உலகம்
Updated: 12:43 GMT, Apr 24, 2017 | Published: 12:36 GMT, Apr 24, 2017 |
0 Comments
1152
icon_com
This post was written by : Elakkiya
c0a68cb9-5627-4343-aa0c-26d826bc5f44

மேற்குக் கரைக்கும் ஜெருசலேமுக்கும் இடையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய பொலிஸ் அதிகாரி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்துவதற்கு முயன்ற பலஸ்தீனிய பெண் ஒருவர் மீது இஸ்ரேலிய படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (திங்கட்கிழமை) இந்த சம்பவம் நிகழ்ந்ததாக இஸ்ரேல் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் 39 வயதுடைய பெண் ஒருவரே கைது செய்யப்பட்டதாகவும் கத்திக்குத்துக்கு இலக்காகிய பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் இஸ்ரேலிய படையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இஸ்ரேலிய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரைப்பகுதியில் 14 பலத்தீனியர்கள் ஏற்கனவே தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg