Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு

In இலங்கை
Updated: 12:44 GMT, Apr 24, 2017 | Published: 12:38 GMT, Apr 24, 2017 |
0 Comments
1220
This post was written by : Shailu

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட முதியோர்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முதியோர்களுக்கு உணவு பொதிகளும், மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் மயில்வாகனம் விமலாதரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் கணபதிப்பிள்ளை விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் ஒரு முயற்சியாகவே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg