Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லலித் அத்துலத்முதலியின் வேலைத் திட்டங்களை அமுல்படுத்துவது கடமையாகும்: ரணதுங்க

In இலங்கை
Updated: 13:30 GMT, Apr 24, 2017 | Published: 13:30 GMT, Apr 24, 2017 |
0 Comments
1207
This post was written by : Vithushagan

துறைமுக அதிகார சபையின் அபிவிருத்தியின் பொருட்டு லலித் அத்துலத்முதலி ஏற்படுத்திய செயன்முறையை முன்னோக்கி கொண்டு செல்வது அனைவரதும் கடமையாகுமென துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை  அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற லலித் அத்துலத்முதலியின் நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனநாயக ஐக்கிய தேசிய ஊழியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு இலங்கை துறைமுக அதிகார சபையின் ஜய பாலு முகாமைத்துவ கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், “அரசியலை முன்னிலைப்படுத்தி செயற்படுகின்ற இந்த காலப்பகுதியில் லலித் அத்துலத்முதலி தன்னுடைய இறுதி தறுவாய் வரையில் நாட்டை பற்றி மட்டும் சிந்தித்து செயற்பட்டமை எம் அனைவருக்கும் சிறந்த உதாரணமாகும்.

மஹாபொல புலமைப்பரிசில் முறையை ஏற்படுத்தி குறை வருமானம் பெறும் குடும்பத்திலிருந்து வருகின்ற கல்வி கற்கும் ஆற்றலுடைய பிள்ளைகளை முன்னோக்கிக் கொண்டுச் செல்வதற்கு லலித் அத்துலத்முதலி பெரும் துணைபுரிந்தார்” என மேலும் தெரிவித்தார்.

unnamed (9) unnamed (8)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg