Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:55 GMT, Apr 24, 2017 | Published: 15:03 GMT, Apr 24, 2017 |
0 Comments
1273
icon_com
This post was written by : Sivaguru Siva
images

பிரெஞ்சு ஜனாதிபதித்  தேர்தலில் இமானுவேல் மக்ரோன் மற்றும் மரீன் லெ பென் ஆகிய இருவருக்குமே இறுதிச்சுற்றுவாய்ப்பு கிட்டியுள்ளது.

இந்த நிலையில் அதிதீவிர வலதுசாரியாளார் மரீன் லெ பெனுக்கு தடைபோடும் வகையில் முக்கியகட்சிகள் இமானுவேல் மக்ரோனுக்குரிய ஆதரவு நிலைப்பாடுளை வெளிப்படுத்திவருகின்றன.

அந்தவகையில் இரண்டாம் சுற்றில் தனது வாக்கு இமானுவேல் மக்ரோனுக்கு வழங்கப்படுமென இன்று அரசதலைவர் பிரான்சுவா ஒலாந் அறிவித்துள்ளார்.

மக்ரோனுக்கு வாக்களிக்குமாறு சோசலிசக்கட்சி அழைப்பு விடுத்தபின்னர் பிரான்சுவா ஒலாந்தின் கருத்துவந்துள்ளது

ஏற்கனவே மக்ரோனுக்குரிய ஆதரவு நிலைப்பாட்டை வலதுசாரித்தலைவர் பிரான்சுவா ஃபியோங் வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

gettyimages-95747448

அமெரிக்காவின் விமானந்தாங்கி கப்பலை ஒரே அதிரடித்தாக்குதலில் மூழ்கடிக்கப்போவதாக வடகொரியா எச்சரித்துள்ளது.

அமெரிக்க விமானந்தாங்கி கப்பலான கார்ள்ஸ் வின்சன் ஜப்பானிய நாசகாரிக்கலங்கள் இரண்டிக் பங்களிப்புடன் பிலிப்பைன்சுக்கு அருகே பயிற்சியில் ஈடுபடும் நிலையில் வடகொரியாவின் எச்சரிக்கை வந்துள்ளது

crpf_jawans

இந்தியாவின் சத்திஸ்கர் மாநிலத்தில் மத்திய காவற்துறையினர் மீது மாவோவாதிகள் நடத்திய திடீர் அதிரடித் தாக்குதலில் காவற்துறையினர் 24 பேர் பலியாகியுள்ளனர்.

கொல்லப்பட்ட படையினரிடமிருந்த ஆயுதங்களையும்  மாவோவாதிகள் எடுத்துச்சென்றுள்ளனர்.

இன்று நண்பகல்வேளையில் வீதி சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த படையினா மீது 300 மாவோவாதிகள் இணைந்து நடத்திய இந்ததாக்குதலில்  12 பேர் மாவோவாதிகளும் கொல்லப்பட்டனர்

இந்த சம்பவத்தையடுத்து சத்திஸ்கர் மாநில முதல்வர் ரமன் சிங் தனது டெல்லி பயணத்தை விரைவாக முடித்துக் கொண்டு மாநிலம் திரும்பியுள்ளார்

download

அமெரிக்காவுக்கும்  மெக்சிகோவுக்கும் இடையில் நிர்மாணிக்கப்படும் தடுப்புவேலி;க்கான நிதியை மெக்சிகோ ஏதாவது வழியில் வழங்கியே தீருமென அமெரிக்க   ஜனாதிபதி  டொனால்ட் ரம்ப் கூறியுள்ளார்.

டொனால்ட்ரம்ப்    ஜனாதிபதியாக  பதவியேற்ற 100-வது நாளில் அவரது பணியகத்தில் நடைபெற்ற வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் கருத்துரைத்த ரம்ப் தடுப்புவேலி   அமைவதற்கான நிதியை ஏதேனும் ஒருவகையில் மெக்சிகோ அந்த நிதியை அளித்தே தீருமெனவும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg