Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் ஆக்கப்பட்டோருக்காக சிதறு தேங்காய் அடித்து வழிபாடு!

In இலங்கை
Updated: 15:23 GMT, Apr 24, 2017 | Published: 15:23 GMT, Apr 24, 2017 |
0 Comments
1134
This post was written by : Vithushagan

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர், வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் சிதறு தேங்காய் அடித்து வழிபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) 60 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், தமது கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் சிதறு தேங்காய் அடித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

தமது போராட்டம் இரண்டு மாதங்களை அடைந்துள்ள போதும் அரசாங்கம் உரிய பதிலைத் தரவில்லை எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட காத்திரமான நடவடிக்கையை முன்னெடுக்கவில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கந்தசுவாமி ஆலய முன்றலில் ஒன்றுகூடி தேங்காய் உடைத்து அழுது புலம்பி “முருகா! நீயாவது எமக்கு நீதியைப் பெற்றுத்தா” என உறவுகள் உருக்கமாக வேண்டியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg