Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேவைக்கு ஏற்ப அரசியல் நடத்தமுடியாது: ராஜித சேனாரத்ன

In இலங்கை
Published: 16:27 GMT, Apr 24, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Vithushagan
rajitha
இந்த நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்ப அரசியல் நடத்தப்படுமே தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் தேவைக்கு ஏற்ப நடத்தப்படாது என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில்  ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய சங்கத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் தவறியுள்ளதாக கூறி ஐரோப்பிய ஒன்றியத்தில் எதிர்ப்பு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.  இந்த யோசனை மீதான விவாதம் எதிர்வரும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த யோசனை நிறைவேற்றப்படும் பட்சத்தில், இந்த வருடத்தில் இலங்கைக்கு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டுள்ள ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளதென தெரிவிக்கப்படுகிறது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg