Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பெற்றோலியத் துறை பிரச்சினைக்கு பிரதமரே தீர்வு வழங்க வேண்டும்: இசுறு தேவப்பிரிய

In இலங்கை
Updated: 04:52 GMT, Apr 25, 2017 | Published: 03:08 GMT, Apr 25, 2017 |
0 Comments
1231
icon_com
This post was written by : Surenth
Isuru Desapriya

பெற்றோலியத் துறை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே நிரந்தரமாக தீர்த்து வைக்க வேண்டும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு  தேவப்பிய தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் நேற்று (திங்கட்கிழமை) வழங்கிய விஷேட செவ்வியின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செவ்வியில் அவர் மேலும் தெரிவிக்கையில் “பெற்றோல் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாரில்லை. பெற்றோலியத் துறை ஊழியர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சருடன் நடாத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்தே, ஜனாதிபதியிடம் சென்றுள்ளனர். ஜனாதிபதி இது தொடர்பில் தனக்கு தொடர்பில்லை என்றும் இதனை பிரதமருடன் பேசி தீர்த்துக் கொள்ளுமாறும் தெளிவாக கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டைக்குச் சென்று அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கப் போவதாகவும் திருகோணமலைக்குச் சென்று அங்குள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கப் போவதாகவும், பின்னர் இதில் ஏதாவதொன்றை ஜப்பானுக்கு வழங்குவதாகவும் பிரதமர் கூறுகின்றார்.

இவ்வாறு அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். எனவே, பெற்றோலிய பிரச்சினைக்கு பிரதமரே தீர்வு வழங்க வேண்டியவராக காணப்பட்டார்.

இதன் காரணமாகவே, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். இதற்கான நிரந்தர தீர்வை பிரதமரே பெற்றுக் கொடுக்க வேண்டும்” என இசுறு  தேவப்பிய மேலும் கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg