Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இரசாயன தாக்குதலின் எதிரொலி: சிரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடை

In
Published: 03:48 GMT, Apr 25, 2017 |
0 Comments
1335
icon_com
This post was written by : Risha
syria

சிரியாவில் இம்மாதத்தின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட சந்தேகத்திற்கிடமான இரசாயன தாக்குதலின் எதிரொலியாக, சிரிய அரச அமைப்பிலுள்ள அதிகாரிகள் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

அந்தவகையில், சிரிய அறிவியல் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரியும் 271 ஊழியர்களின், அமெரிக்காவிலுள்ள அனைத்து சொத்துக்களையும் முடக்குமாறு கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்க குடிமக்கள் சிரியாவுடன் எந்தவொரு தொடர்பையும் பேணுவதை தடுக்கும் வகையிலேயே இந்த பொருளாதார தடைகள் அமைந்துள்ளன.

மேலும், சிரிய சர்வாதிகார ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் கொடூரமான இரசாயன ஆயுத தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டமையினாலேயே விஞ்ஞான ஆதரவு மையத்தை இலக்குவைத்து இந்த கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கருவூலத்துறையின் செயலாளர் ஸ்டீவன் நியூச்சன் தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள கான் ஷேக்ஹூன் நகரில் இம்மாத ஆரம்பத்தில் நடத்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான இரசாயன தாக்குதலில் நரம்பு பாதிப்பிற்குள்ளாகி 80இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

எனினும் இதுவொரு கட்டுக்கதை எனத் தெரிவித்துவரும் சிரிய தரப்பு, இரசாயன தாக்குதல் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg