Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஹைதராபாத் அணியை பழி தீர்க்குமா பெங்களூர் அணி

In கிாிக்கட்
Updated: 05:05 GMT, Apr 25, 2017 | Published: 04:26 GMT, Apr 25, 2017 |
0 Comments
1216
icon_com
This post was written by : Anojkiyan
hya

ஐ.பி.எல். தொடரின் 29வது லீக் போட்டியில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், பெங்களூர் அணிக்கு விராட் கோஹ்லியும், ஹைதராபாத் அணிக்கு டேவிட் வோர்னரும் தலைமைதாங்கவுள்ளனர்.

நடப்பு தொடரின் தொடக்கப் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் அடைந்த தோல்விக்கு, பெங்களூர் அணி இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்குமா என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிரடி துடுப்பாட்ட வீரர்களாக இருந்தாலும் கடந்த கொல்கத்தா அணியுடனான போட்டியில், வெறும் 49 ஓட்டங்களுக்கு சுருண்ட பெங்களூர் அணி, பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் எழுச்சி கண்டு தன்மீதான விமர்சனங்களுக்கு பெங்களூர் அணி முற்றுப்புள்ளி வைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

இதேவேளை புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள ஹைதராபாத் அணி, முக்கியமாக பந்து வீச்சில் பலம் பொருந்திய அணியாக திகழ்கின்றது. இவ்வாறானதொரு நிலையில், பெங்களூர் அணியின் வெற்றிக்கு ஹைதராபாத் அணி வழிவிடுமா என்ற கேள்விக்கு பதில் கூறுவது சற்று கடினமானதே.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg