Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பிணையில் விடுதலையானார் ஸ்டாலின் (2ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 12:38 GMT, Apr 25, 2017 | Published: 05:48 GMT, Apr 25, 2017 |
0 Comments
1230
icon_com
This post was written by : Shailu
stalin

முழு அடைப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விடுதலையின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், தி.மு.க-வால் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்பு போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த வெற்றிக்கு காரணமான அனைவருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்துக்கட்சிகளின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இப்போராட்டம் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றதாக கூறிய அவர், விவசாயிகளுக்கான போராட்டம் முழு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் கைது

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பேரணி நடத்திய தி.மு.க.வினர், திரூவாரூர் பேருந்து நிலையத்தின் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டதோடு சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களை கலைந்துசெல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்திய போதும், அதனை செவிமடுக்காததால் ஸ்டாலின் மற்றும் கட்சியின் தொண்டர்கள் பலர் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட அனைவரும் திருவாரூர் பேரூந்து நிலையத்திற்கு அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தி.மு.க. ஏற்பாடு செய்துள்ள இப் போராட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்துகொண்டுள்ளதோடு, பாதுகாப்புப் பணிகளுக்காக சுமார் ஒரு இலட்சம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg