Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெப்பம் காரணமாக மரமுந்திரிகை உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி

In இலங்கை
Published: 05:50 GMT, Apr 25, 2017 |
0 Comments
1306
This post was written by : Surenth

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பம் காரணமாக மரமுந்திரிகை உற்பத்தியில் 95 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபன மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ரீ.ஜே.நிதர்சன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வெப்பம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில், மரமுந்திரிகை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அதிக வெப்பத்தின் காரணமாக மரமுந்திரிகைப் பூக்கள் கருகி விடுவதால் பழங்கள் மற்றும் விதைகளைப் பெறுவதில் உற்பத்தியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் 8 ஆயிரம் ஏக்கரில் மரமுந்திரிகை செய்கை பண்ணப்பட்ட போதிலும் பாரியளவிலான உற்பத்தி வீழ்ச்சியினால் மரமுந்திரிகைச் செய்கையாளர்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், மரமுந்திரிகை அறுவடைக் காலம் ஆரம்பித்துள்ள போதிலும் மிகக் குறைந்தளவிலான பழங்களையே அறுவடை செய்ய முடிந்துள்ளதாகவும் ஏனையவை வெப்பம் காரணமாக அழிந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடமே மரமுந்திரிகையில் பாரிய உற்பத்தி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg