Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிறந்தநாளை கொண்டாடிய சச்சினுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவிப்பு

In கிாிக்கட்
Updated: 06:28 GMT, Apr 25, 2017 | Published: 05:43 GMT, Apr 25, 2017 |
0 Comments
1392
This post was written by : Anojkiyan
sachin-celebrates-his-birthday_9f507f82-28ed-11e7-bd89-19cc2c5d765e

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பிறந்த நாளிற்கு சர்வதேச கிரிக்கெட் சபை வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் உலகில் இன்றுவரை அசைக்க முடியாத சாதனைகளுக்கு உரித்தானவரான சச்சின், நேற்று (திங்கட்கிழமை) தனது 44வது பிறந்தநாளை கொண்டாடினார்.

அவருக்கு பலரும் தமது வாழ்த்து செய்திகளை டுவிட்டரூடாக பதிவிட்டுள்ளனர். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘கிரிக்கெட்டின் கதாநாயகன் சச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என பதிவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கடவுள் உங்களுக்கு மேலும் மகிழ்ச்சியையும், அமைதியையும் அளிப்பாராக. எப்போதும் எனது கிரிக்கெட் ஹீரோ சச்சின் தான்” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக், இன்னாள் வீரர்களான அஸ்வின், பிரக்யான் ஓஜா, ஹர்பஜன்சிங், அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் வீரர்களான மைக்கேல் கிளார்க், கில்கிறிஸ்ட் உள்ளிட்ட பலரும் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg