Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கொல்கத்தா அணியுடனான தோல்வி குறித்து மனம் திறக்கிறார் கோஹ்லி

In கிாிக்கட்
Updated: 06:56 GMT, Apr 25, 2017 | Published: 06:14 GMT, Apr 25, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Anojkiyan
kf

துடுப்பாட்ட வீரருக்கு எதிர்ப்புறத்தில் உள்ள பெரிய கறுப்பு திரையில் ஏற்பட்ட கவனச்சிதறல் காரணமாகவே கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடனான தோல்விக்கு காரணம் என, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கடந்த 23ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கெதிரான 27ஆவது லீக் போட்டியில், பெங்களூர் அணி வெறும் 49 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 82 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

அதிரடி துடுப்பாட்ட வீரர்களை கொண்டுள்ள பெங்களூர் அணி, இவ்வாறு விமர்சிக்கும் அளவுக்கு தோல்வியடைந்தமை அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இந்நிலையில், இத்தோல்விக்கான காரணம் குறித்து பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தொடர்ந்து கூறுகையில்,

“தான் துடுப்பாட்டம் செய்வதற்கு முன்னரே துடுப்பாட்ட வீரருக்கு எதிர்ப்புறத்தில் உள்ள பெரிய கறுப்பு திரையின் பக்கத்தில், சிலர் கவனச்சிதறல் ஏற்படும் வண்ணம் அமர்ந்திருந்தனர்.

அவர்களை உடனே அகற்றும்படி கூறினேன். இருப்பினும், பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அதை சரியாக செய்யவில்லை. அதனான் முதல் பந்திலேயே நான் ஆட்டமிழந்தேன்” என கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg