Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் நிலக்கடலை

In
Updated: 06:58 GMT, Apr 25, 2017 | Published: 06:14 GMT, Apr 25, 2017 |
0 Comments
1173
icon_com
This post was written by : Elakkiya
images (15)

ஏழைகளின் பாதாம் என்று கூறப்படும் நிலக்கடலை, பாதாம் பருப்பை விடவும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன.

நிலக்கடலையில் கார்போஹைதரேட், நார்ச்சத்து, கரையக் கூடிய கொழுப்பு, புரோட்டின், விட்டமின், இரும்புச்சத்து, கல்சியம், பொஸ்பரஸ், பொட்டாசியம் என உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய சத்துக்களும் அடங்கியுள்ளன. இத்தனை சத்துக்கள் நிறைந்திருக்கும் நிலக்கடலையை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

நிலக்கடலையை சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும், மன அழுத்தம் நீங்கும், கொழுப்பை குறைக்க முடியும். அதேபோன்று பித்தப்பை கல் கரையும் என்றும் கூறப்படுகின்றது.

நிலக்கடலையை தினமும் 30 கிராம் சாப்பிடும்போது பித்தப்பை கல் உருவாகுவதை தடுக்க முடியும். 20 ஆண்டுகால ஆய்வில், நிலக்கடலையை சாப்பிடுவதால் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு 25 சதவீதம் குறைவடைகின்றது என கண்டறியப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg