Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டி: மகிழ்ச்சியில் ஸ்மித்

In கிாிக்கட்
Updated: 07:45 GMT, Apr 25, 2017 | Published: 06:47 GMT, Apr 25, 2017 |
0 Comments
1160
This post was written by : Anojkiyan

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான போட்டியின் முடிவு சிறப்பாக இருந்தமை மகிழ்ச்சி அளிப்பதாக, புனே சூப்பர் ஜெயன்ட் அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரின் மும்பை அணிக்கெதிரான நேற்றைய (திங்கட்கிழமை) 28வது லீக் போட்டியில், புனே அணி மூன்று ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே ஸ்மித் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“போட்டியின் முடிவு சிறப்பாக இருந்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் 40 ஓவர்கள் வரை ஆடுகளம் ஒரே மாதிரியாக இருந்தது. நடுத்தர ஓவரில் மும்பை அணியின் விக்கெட்டுகளை கைப்பற்றியதால் நெருக்கடி கொடுக்க முடிந்தது.

ஸ்டோக்ஸ் மிகவும் அபாரமாக பந்துவீசினார். கடைசி ஓவரை உனட்கட் மிகவும் கடுமையாக போராடி வீசினார்” என கூறினார்.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இறுதியில் இருந்த புனே அணி, நான்காவது இடத்திற்கு முன்னேறியது. அத்தோடு பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் அதிகரித்துக்கொண்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg