Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புனே அணியுடனான தோல்வி ஏமாற்றமளிக்கின்றது: சர்மா கவலை

In கிாிக்கட்
Updated: 07:59 GMT, Apr 25, 2017 | Published: 07:15 GMT, Apr 25, 2017 |
0 Comments
2026
icon_com
This post was written by : Anojkiyan
RohitSharma-Pardaphash-95899 (2)

புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்தமை ஏமாற்றமளிப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா கவலை வெளியிட்டுள்ளார்.

ஐ.பி.எல். தொடரின்  புனே அணிக்கெதிரான நேற்றைய (திங்கட்கிழமை) 28வது லீக் போட்டியில், மும்பை அணி மூன்று ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இத் தோல்வியின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“வெற்றியை நோக்கி நெருங்கி வந்து தோல்வி அடைந்தமை மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றது. நாங்கள் முடிந்தவரை சிறப்பாகவே விளையாடினோம். ஆனால் வெற்றிகரமாக நிறைவு செய்யாததால் ஏமாற்றம் அடைகிறேன்.

நடுத்தர ஓவரில் விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் ஒரு சில தவறு செய்தோம். ஒட்டு மொத்தமாக இந்த போட்டி சிறப்பாக இருந்தது.

ஆடுகளம் சுழற்பந்து வீரர்களுக்கு ஏற்ற வகையில் இருந்தது. எங்களது சுழற்பந்து வீரர்கள் சிறப்பாக செயற்பட்டனர். புனே அணியின் கடைசி ஓவரை ஜெய்தேவ் நேர்த்தியாக வீசினார். முதல் பந்திலேயே விக்கெட் இழந்ததால் நெருக்கடிக்குள்ளானோம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg