Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டனிலிருந்து புறப்பட்ட முதல் சரக்கு ரயில் சீனாவை சென்றடைந்தது

In
Updated: 07:10 GMT, Apr 25, 2017 | Published: 07:10 GMT, Apr 25, 2017 |
0 Comments
1899
This post was written by : Risha

பிரித்தானியாவிலிருந்து சீனாவிற்கான பயணத்தை ஆரம்பித்த முதலாவது சரக்கு ரயில், வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் யுகூர் பிராந்தியத்தை சென்றடைந்துள்ளது.

லண்டனில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட முதல் சீன-ஐரோப்பிய சரக்கு ரயிலானது, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் ஒன்பது நாடுகளூடாக சுமார் 12 ஆயிரம் தூரத்தை கடந்து நேற்று (திங்கட்கிழமை) சீனாவை சென்றடைந்துள்ளது.

41 கொள்கலன்களில் 210 தொன் எடையுடைய விற்றமின் பொருட்கள், குழந்தைகளுக்கான பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுடன் குறித்த ரயில் பிரித்தானியாவின் பார்கிங் புறநகர் பகுதியிலிருந்து கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் புறப்பட்டது.

இந்நிலையில், இந்த சரக்கு ரயில் போக்குவரத்தானது எதிர்காலத்தில் ஒரு வழக்கமான சேவையாக மாறும் என ஜின்ஜியாங் சர்வதேச சரக்கு நிறுவனத்தின் துணை முகாமையாளர் ஜவ் கிங்ஸோங் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சீனாவில் இருந்து கடந்த ஜனவரி மாதம் முதலாவது சரக்கு ரயில் பிரித்தானியாவை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg