Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நெருக்கடியை கையாளும் விதத்திலேயே வெற்றி தங்கியுள்ளது: தோனி அறிவுரை

In கிாிக்கட்
Updated: 07:56 GMT, Apr 25, 2017 | Published: 07:39 GMT, Apr 25, 2017 |
0 Comments
1083
icon_com
This post was written by : Anojkiyan
Rising Pune Supergiants during Practice Session at PCA

நடப்பு ஐ.பி.எல். தொடரில் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி தனது அதிரடியால் இரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்திவரும் புனே சூப்பர் ஜெயன்ட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் தோனி, நெருக்கடியை எப்படி கையாள்கிறோம் என்பதில்தான் வெற்றி உள்ளது என கூறியுள்ளார்.

சமீபகாலமாக சோபிக்கத் தவறிவரும் தோனி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில், இறுதிவரை களத்தில் நின்று அணியினை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றதன் மூலம் தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

இப்போட்டியில் 34 பந்துகளில் 61 ஓட்டங்கள் விளாசிய தோனி இது குறித்து கூறுகையில், “நிதானமாகவும் பொறுமையாகவும் செயற்பட்டால், எத்தகைய ஓட்ட எண்ணிக்கையும் பெரிதல்ல. எதிரணியின் பந்துவீச்சாளர்களை பொறுத்து இதன் தாக்கம் குறையும். பந்துவீச்சு எடுபடாத நிலையில், சிறப்பாக துடுப்பெடுத்தாடினால் கடைசி 4 ஓவர்களில் 60 ஓட்டங்களைக்கூட எடுக்கலாம். பதற்றப்படாமல் இருப்பதும் முக்கியம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg