Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நடுவரிடம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட ரோஹித் சர்மாவுக்கு அபராதம்

In கிாிக்கட்
Updated: 09:23 GMT, Apr 25, 2017 | Published: 08:41 GMT, Apr 25, 2017 |
0 Comments
2110
icon_com
This post was written by : Anojkiyan
tha

ஐ.பி.எல். தொடரின் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்கெதிரான போட்டியில், நடுவரிடம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சர்மாவுக்கு, போட்டியில் பெறும் கட்டணத்தில் 50 சதவீத தொகையை ஐ.பி.எல் நிர்வாகம் அபராதமாக விதித்துள்ளது.

நேற்றைய (திங்கட்கிழமை) போட்டியின் போது, களத்தில் ரோஹித் சர்மாவும் ஹர்திக் பாண்டியாவும் துடுப்பெடுத்தாடியபோது இறுதி ஓவரை உனட்கட் வீசினார். இதன்போது முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா பிடியெடுப்பு கொடுத்து ஆட்டமிழந்தார்.

இரண்டாவது பந்து அகலப்பந்தாக சென்றது. ஆனால், இந்த பந்தை கள நடுவர்கள் அகலப்பந்தாக அறிவிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சர்மா ஆவேசமாக இரண்டு நடுவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த செயல் போட்டி விதிமுறைகளை மீறியது என்பதாலேயே ஐ.பி.எல். நிர்வாகம் அவருக்கு அபராதம் விதித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg