Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிச் சூடு: 26 பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழப்பு

In இந்தியா
Published: 08:02 GMT, Apr 25, 2017 |
0 Comments
1179
icon_com
This post was written by : Shailu
Maoist

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதுகாப்புப்படை வீரர்கள் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நேற்று (திங்கட்கிழமை) ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் மேலும் பல பாதுகாப்பு படைவீரர்கள் படுகாயமடைந்ததோடு அவர்கள், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுக்மா மாவட்டத்தில் உள்ள காலாபத்தர் பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு சாலை அமைத்து வரும் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக, 74-ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 99 வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது கறுப்புச் சீருடையில் வருகை தந்த 300இற்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்டுகள் இவ்வாறு திடீர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg