Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய முன்னணியின் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்குவதாக லி பென் அறிவிப்பு

In ஐரோப்பா
Updated: 08:58 GMT, Apr 25, 2017 | Published: 08:18 GMT, Apr 25, 2017 |
0 Comments
1130
This post was written by : Risha

தேசிய முன்னணியின் தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாக தீவிர வலதுசாரி கட்சியின் பிரான்ஸ் ஜனாதிபதி வேட்பாளர் மரைன் லி பென் அறிவித்துள்ளார்.

ஒரு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தாது, நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் அந்நாட்டு ஜனாதிபதி செயற்பட வேண்டும் என்ற ரீதியில் தான் இந்த பதவியை இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இது தற்காலிகமான பதவி விலகலே என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் எம்மானுவேல் மக்ரோன் 23.7 வீத வாக்குகளையும், மரைன் லி பென் 21.7 வீத வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், இரண்டாவது சுற்று வாக்குப்பதிவு எதிர்வரும் மே மாதம் 7ஆம் இடம்பெறவுள்ள நிலையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg