Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி சடலமாக மீட்பு

In இந்தியா
Published: 08:27 GMT, Apr 25, 2017 |
0 Comments
1258
icon_com
This post was written by : Shailu
girl

கர்நாடகாவில் 400 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி ஒருவர் 50 மணி நேர போராட்டத்தின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெலகாவி மாவட்டம் சாஞ்சரவாடி கிராமத்தில் காவேரி என்ற 6 வயது சிறுமி, கடந்த 22ஆம் திகதி தனது சகோதரியுடன் விளையாடும் போது 400அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்தார்.

இது குறித்து, பொலிஸ் மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சிறுமி 30 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டிருந்ததை கமரா மூலம் கண்டறிந்த மீட்பு படையினர் உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுத்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

எனினும் சுமார் 50 மணி நேர போராட்டத்தின் பின்னர் குறித்த சிறுமி நேற்று (திங்கட்கிழமை) சடலமாகவே மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பிரதேச மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg