Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘அன்சாக் தினம்’ லண்டனிலுள்ள அவுஸ்ரேலிய போர் நினைவகத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது:-

In
Updated: 11:34 GMT, Apr 25, 2017 | Published: 09:04 GMT, Apr 25, 2017 |
0 Comments
1131
This post was written by : Risha

முதலாம் உலகப் போரில் போராடி உயிர்நீத்த அவுஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவத்தினரை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இடம்பெறும் அன்சாக் தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) லண்டனிலுள்ள அவுஸ்ரேலிய போர் நினைவகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

1915ஆம் ஆண்டு முதலாம் உலகப் போரின் போது பிரித்தானிய பேரரசின் துருக்கி மீதான ‘கலிப்பொலி’ போர் நடவடிக்கையின் போது கலிப்பொலி என்ற இடத்தில் தரையிறங்கிய போது கொல்லப்பட்ட இராணுவத்தினரை நினைவுகூர்ந்தே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு லண்டனில் இடம்பெற்ற அதிகாலை பிரார்த்தனை நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு, உயிரிழந்த இராணுவத்தினரை நினைவுகூர்ந்தனர்.

லண்டன் ஹைட் பார்க்கிலுள்ள அவுஸ்ரேலிய போர் நினைவகத்தில் இடம்பெற்ற நிகழ்வில், யோர்க் நகர இளவரசர் மற்றும் பிரித்தானிய, அவுஸ்ரேலிய, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் இராணுவ பிரதிநிதிகள் கலந்துகொண்டு மலர் வளையம் வைத்து உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg